மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கேஜரிவால் ஜாமீன் மனு: இன்று மாலை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு!

கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும்...

News image

கேஜரிவால் - Center-Center-Delhi

Updated On :5 ஆகஸ்ட் 2024, 6:54 am

அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலால் முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது.

அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, திகாா் சிறையில் இருந்த கேஜரிவாலை கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ கைது செய்தது.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியபோதிலும், சிபிஐ வழக்கில் அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் தில்லி உயா் நீதிமன்றத்தில் கேஜரிவால் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி நீணா பன்சல் கிருஷ்ணா முன்னிலையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுமா, இல்லை மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று இன்று மாலைக்குள் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.