நிதீஷ் குமாரைக் கண்டு பாஜக பயப்படுகிறது: பிரசாந்த் கிஷோர்!
பிகாரை முன்னேற்ற நிதீஷ் குமாருக்கும் பாஜகவுக்கும் இது முதல் வாய்ப்பு அல்ல..


பிகார் முதல்வர் நிதீஷ் குமாரைக் கண்டு பாஜக பயப்படுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய கிஷோர்..
பாஜக அரசின் மீது நிதீஷ் குமாருக்கு ஏற்பட்ட பயம், பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரியின் தலைப்பாகையை முதலில் கழற்றியது. அதன்பிறகு, அவர் தனது விருப்பப்படி பிகாரில் அமைப்பு மாற்றங்களைச் செய்யுமாறு பாஜகவின் மத்திய தலைமையையும் வற்புறுத்தினார்.
பிகாரில் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சாம்ராட் சௌத்ரி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திலீப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டபோது பாஜகவின் மாநிலத் தலைமை மாற்றம் குறித்து கிஷோர் குறிப்பிட்டார். நிதீஷ் குமார் பாஜகவில் அவர் விரும்பிய மாற்றங்களைப் பெற்றார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், பிகாரின் சிறப்பு அந்தஸ்து தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த கிஷோர், நிதீஷ்குமார் 15 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது.
பிகாரை முன்னேற்ற நிதீஷ் குமாருக்கும் பாஜகவுக்கும் இது முதல் வாய்ப்பு அல்ல. இன்று பிகார் எம்.பி.க்களின் ஆதரவு இல்லாமல் மத்தியில் பாஜக அரசு இயங்குவது கடினம் என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே, மக்கள் இப்போது சிறப்பு அந்தஸ்து பற்றிப் பேசுகிறார்கள், நிதீஷ்குமார் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...