இந்தியாவில் 1 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்த யூடியூப் ஷார்ட்ஸ்!

யூடியூப் தளத்தின் ஷார்ட்ஸ் விடியோக்கள் இந்தியாவில் 1 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

இந்தியாவில் யூடியூப் தளத்தில் வெளியிடப்படும் ஷார்ட்ஸ் விடியோக்கள் 1 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

விடியோக்கள் வெளியிடப்படும் தளமான யூடியூப், இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு 60 நொடிகள் ஓடும் ஷார்ட்ஸ் விடியோக்களைத் தனது தளத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியாவில் ஷார்ட்ஸ் விடியோக்கள் செய்துள்ள சாதனைகள் குறித்துப் பேசிய யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், “இந்தியப் படைப்பாளிகள் உள்ளூர் விஷயங்களை காணொளிகளாக்கி உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். பயன்பாடு மற்றும் பார்வை நேரம் ஆகியவற்றில் இந்தியாவில் யூடியூப் தளம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷார்ட்ஸ் விடியோக்கள் தற்போது மிகப்பெரிய சாதனையாக 1 லட்சம் கோடி பார்வைகளைக் கடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்

யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன்
யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன்

மேலும், “இந்தியாவில் தொலைக்காட்சி இணைப்புகளில் அதிகம்பேரால் பார்க்கப்படும் தளமாக உள்ள யூடியூப், கடந்த 3 ஆண்டுகளில் 4 மடங்கு அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

யூடியூப் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் தங்களுக்கென வணிகம் சார்ந்த குழு, எழுத்தாளர் குழு மற்றும் காணொளி தயாரிப்பு குழுக்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றனர். இதன் மூலம், பொழுதுபோக்கு, செய்தி மற்றும் கல்வியை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும், அவர்கள் யூடியூப் தளத்தின் வளர்ச்சியையும் முன்னெடுக்கின்றனர்” என்று கூறினார்.

கோப்புப் படம்
ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் குவிகிறதா?

யூடியூப் தளத்தில் தொலைக்காட்சி மற்றும் ஷார்ட்ஸ் விடியோக்களுக்கு புதிய வகை விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய விளம்பர வடிவங்களைப் பயன்படுத்தி, விளம்பரதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிராண்டுகளுக்கு உதவ முடிவெடுத்துள்ளாதாகவும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

”தொலைக்காட்சி அல்லது மொபைல் என எந்தத் திரையாக இருந்தாலும் பொழுதுபோக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்தியாவை இணைக்கும் விதமாக யூடியூப் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஒரு அடிப்படை மாற்றம் உருவாகியுள்ளது.

சிறந்த தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை வழங்குவதன் மூலமும், புதிய விளம்பர வடிவங்களை உருவாக்குவதன் மூலமும், எந்தத் திரையிலும், எந்த வடிவத்திலும் விளம்பரதாரர்களை அவர்களின் பார்வையாளர்களுடன் தடையின்றி இணைக்கும் வகையில் புதிய மாற்றத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூகுள் இந்தியாவின் சந்தைப்படுத்தல் துறையின் துணைத் தலைவர் சேகர் கோஸ்லா கூறியுள்ளார்.

கோப்புப் படம்
நீங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டீர்கள்: பஜ்ரங் புனியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com