திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பூஜா கேத்கரின் முன்ஜாமீன் மனு: ஆக.12-க்கு ஒத்திவைப்பு!

பூஜா கேத்கரின் முன்ஜாமீன் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

பூஜா கேத்கர்

Updated On :9 ஆகஸ்ட் 2024, 3:43 pm IST

முன்னால் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கா் சிக்கினாா். இதைத் தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்தது உள்பட அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதை விசாரித்த மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி, பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் பூஜா தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்தது. மேலும், யுபிஎஸ்சி அளித்த புகாரின் அடிப்படையில் பூஜா மீது 4 பிரிவுகளின் கீழ் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு இன்று கூடாததால் பூஜா கேத்கரின் முன்ஜாமீன் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பூஜா கேத்கரின் முழு சதியையும் வெளிக்கொண்டு வரவும், சதியில் ஈடுபட்ட மற்ற நபர்களின் தொடர்பை உறுதிப்படுத்தவும் குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.