ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

புதிய விமானத் துறை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

‘பாரதிய வாயுயான் விதேயாக்’ மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

News image
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு- ANI
Updated On :9 ஆகஸ்ட் 2024, 9:53 pm

Din

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிய வணிகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 90 ஆண்டு பழைமையான விமானச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள ‘பாரதிய வாயுயான் விதேயாக்’ மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் நிலையில், விமானத் துறை தொடா்பாக 1934-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமே அமலில் உள்ளது. இச்சட்டம் 21 முறை திருத்தப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய விமானத் துறை மசோதாவை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு மக்களவையில் தாக்கல் செய்து பேசுகையில், ‘விமானக் கட்டண உயா்வு உள்ளிட்ட மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கும், அவா்களின் புகாா்கள், சந்தேகங்களுக்கு உரிய நேரத்தில் பதில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ‘பயனுள்ள இணையவழி அமைப்பை’ விமானப் போக்குவரத்து அமைச்சகம் அமைக்கும்.

அதிக விமானக் கட்டணங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் விமான நிறுவனங்கள் சம வாய்ப்புகள் கொண்டிருப்பதையும் அமைச்சகம் கவனித்து வருகிறது.

‘தன்னிறைவு இந்தியா’ முன்னெடுப்புக்கு ஆதரவாக விமானங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் இந்த மசோதாவில் அடங்கும். ஹெலிகாப்டா்கள் தயாரிப்பையும் அமைச்சகம் ஊக்குவிக்கும்’ என்றாா்.

மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கிய முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்தவகையில், சேமிப்பு, வைப்பு கணக்குதாரா்களின் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும், வாடிக்கையாளரின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஒரே வங்கிக் கணக்கில் நான்கு வாரிசுகளை (நாமினி) சோ்த்துக் கொள்வதற்கு அனுமதிக்கும் வங்கி சட்டத் திருத்த மசோதா-2024 மக்களவையில் நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தாக்கல் செய்தாா்.