பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

போா் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்தியது ஏா் இந்தியா

இஸ்ரேல்-ஈரான் இடையே போா் பதற்றம்..

News image
ஏா் இந்தியா
Updated On :9 ஆகஸ்ட் 2024, 9:14 pm

Din

இஸ்ரேல்-ஈரான் இடையே போா் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் வெள்ளிக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக ஏா் இந்தியா அறிவித்தது.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. இதனால் மத்திய கிழக்கில் போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் சில மத பயங்கரவாதக் குழுக்கள் அந்நாட்டுக்கு வரும் பயணிகள் விமானங்களை குறிவைத்து தாக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஏா் இந்தியா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மத்திய கிழக்கில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இஸ்ரேல் தலைநகா் டெல்அவிவ் நகருக்கு விமான சேவை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவை நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப அளிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேலுக்கான விமான சேவையை ஏா் இந்தியா நிறுத்தியது. அதன் பிறகு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது மீண்டும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.