இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வஞ்சக அரசியலுக்கு உதாரணமாக மாறிவிட்டார் ராகுல்: பாஜக!

காங்கிரஸ் தலைவர் "பாசாங்கு அரசியலை" பின்பற்றுகிறார்.

News image

கௌரவ் பாட்டியா

Updated On :10 ஆகஸ்ட் 2024, 10:24 am

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் வஞ்சக அரசியலுக்கு உதாரணமாக மாறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கெரவ் பாட்டியா பேசினார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த 59 வாக்குறுதிகளில் இதுவரை இரண்டு மட்டுமே காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. கர்நாடக மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கிறார்கள். ஹிமாசலிலும் மக்கள் அதே மனநிலையில் தான் இருக்கின்றனர்.

வஞ்சகம், பொய் மற்றும் வஞ்சக அரசியலுக்கு இணையாக ராகுல் காந்தி மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை விவகாரத்தை எழுப்பிய அவர், வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் "பாசாங்கு அரசியலை" பின்பற்றுகிறார். தில்லியில் விவசாயிகள் சந்திக்க ராகுலுக்கு நேரம் உள்ளது.

ஆனால் கர்நாடகத்தில் 1200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அவர்களைச் சந்திக்க ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியவில்லை, இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கர்நாடக முதல்வருக்கு உத்தரவிடவும் இல்லை.

காந்தியின் முன்னுரிமைகள் வேறுபட்டவை என்பதால் தான், ஊழலை ஊக்குவிக்கும் ஒரு முதல்வரை கர்நாடக மக்களுக்கு வழங்கியது கவலையளிக்கிறது.

முதல்வர் மனைவிக்கு எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் நிலம் ஒதுக்கப்பட்ட முடா ஊழல் பற்றி நாம் அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.