
பெங்களூருவில் பேக்கரியின் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய ஊழியரை, பேக்கரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
பெங்களூருவின் பெல் சாலையில் உள்ள பேக்கரிக்கு பெண் ஒருவர் ஆக.10, சனிக்கிழமை, சென்றிருந்தார். இந்த நிலையில், பேக்கரியிலிருந்த கழிப்பறையைப் பயன்படுத்தும்போது, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் மொபைல் போன் மூலம் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்ட அந்தப் பெண், அதிர்ச்சியடைந்தார்.
மொபைல் போன் கேமராவின் லென்ஸ் தெரியும் அளவுக்கு மட்டும் குப்பைத் தொட்டியில் துளையிடப்பட்டு, குப்பைத் தொட்டியினுள் மொபைல் போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும், மொபைல் போனிலிருந்து வரும் சத்தத்தைத் தவிர்ப்பதற்காக, விமானப் பயன்முறையில், கழிப்பறை இருக்கையை நோக்கியவாறு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கேமராவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, சுமார் 2 மணிநேரமாக கழிப்பறையை, கேமரா படம்பிடித்துள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பேக்கரி நிர்வாகத்திடம் ரகசிய கேமரா குறித்து, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மொபைல் போனின் உரிமையாளரான, பேக்கரியில் பணிபுரியும் ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பேக்கரி நிர்வாகம், அவரை பணி நீக்கம் செய்ததுடன், அவர்மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.