பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற மனு பாக்கர், தொழிலதிபர் நீடா அம்பானியை இன்று (ஆக. 11) சந்தித்தார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இம்முறை ஒலிம்பிக் தொடரில் முதல்முறை அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் உடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் மனு பாக்கர் படைத்தார். இதனால் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலதுறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய மனு பாக்கர், அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். தற்போது தொழிலதிபர் நீடா அம்பானியை சந்தித்து வாழ்த்து மனு பாக்கர் பெற்றார். உடன் அவரின் தாயாரும் இருந்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனு பாக்கர், நீடா அம்பானியை சந்தித்ததும், அவரிடம் ஆசி பெற்றதும் மிகவும் சிறப்பான தருணம். உண்மையாக மகிழ்ச்சியில் நிரம்பியுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.