15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கவிதாவின் ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

News image

கவிதா

Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:22 am

தில்லி கலால் கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி கவிதாவின் மேல்முறையீடு மனு மீது சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளில் ஜாமீன் மறுத்த தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கவிதா மேல்முறையீடு செய்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. அதன்படி, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தில்லி கலால் கொள்ளை 2021-22ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றதாக கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

இதையடுத்து ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கவிதாவை கைது செய்தது.

இதனைத்தொடர்ந்து தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.