ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அடுத்த விசாரணை நடத்தப்படும் என்று சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி மீது பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா சார்பில் வழக்கு தொடரப்பட்டு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
பாஜக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவும், தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு என்று அவர் கூறினார்
கடந்த ஜூலை 26-ல் ராகுல் காந்தி இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானார். இதையடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறவிருந்தது. எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சுபம் வர்மா விடுப்பில் இருப்பதால் இன்று விசாரணை நடைபெறவில்லை. மீண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மனுதாரருக்கு உ.பி. நீதிமன்றம் இறுதி வாய்ப்பு

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK





