கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பான கேரள வங்கி அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கேரள வங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலைப்பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் 1000-க்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
சிலர் குடும்பங்களை இழந்தும், வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் வாங்கிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
கேரள வங்கி ஏற்கனவே முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது.
இதுதவிர, கேரள வங்கி ஊழியர்கள் தாமாக முன்வந்து தங்களின் 5 நாள் சம்பளத்தை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வயநாடு நிலச்சரிவு: இழப்பீடு வழங்க சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு

கால்நடைகளைக் கொன்று வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்!

வயநாடு நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK




