ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி முறைகேடு புகாா் விவகாரம்
அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரியும், இதில் தொடா்புடைய ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி விலகக் கோரியும் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தில்லியில் காங்கிரஸ் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுடன் வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.









