
கர்நாடக அரசுப் பள்ளியில் தன்னுடன் பணியாற்றி வந்த ஆசிரியையை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரைத் தாக்கிய ஊர்மக்கள், காலிலும் விழவைத்தனர்.
கர்நாடகத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் உதவி ஆசிரியரான மெஹபூப் அலி, தன்னுடன் பணியாற்றி வந்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பெண் ஆசிரியரின் மொபைல் போனுக்கு பாலியல் ரீதியான, ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
ஆனால், உதவி ஆசிரியரின் இந்த செயலை, ஆசிரியை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், ஆசிரியைக்கு உதவி ஆசிரியர், தன்னை மகிழ்விக்குமாறு கூறி, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பெண் ஆசிரியர் அவரது குடும்பத்தினரிடம், உதவி ஆசிரியரின் மோசமான செய்கையை, தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆசிரியையின் குடும்பத்தினர், பள்ளிக்குச் சென்று, மெஹபூப் அலியைத் தாக்கியதுடன், அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட ஆசிரியையின் காலைத் தொட்டு வணங்குமாறும் மெஹபூப் அலியை வற்புறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மெஹபூப் அலி, தனக்கு ஒரு குடும்பம் இருப்பதாகவும், தன்னை மன்னிக்குமாறு பெண்ணின் குடும்பத்தினரிடம் கோரியதையடுத்து, அவரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் வாங்கியதுடன், பாதிக்கப்பட்ட பெண் விரும்பினால், கைது செய்யப்படலாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.