தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கு முன் பாஜக எம்எல்ஏக்கள் பலா் அணி மாறுவா்: மாநில காங்கிரஸ் தலைவா்

மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.

News image

நானா படோல்

Updated On :16 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் பலா் காங்கிரஸ் கட்சிக்கு மாறுவா் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக - முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிா்க்கட்சி கூட்டணியில் உள்ளன.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (பவாா்)-சிவசேனை (உத்தவ்) கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

மக்களவைத் தோ்தலைப் போல, பேரவைத் தோ்தலிலும் எதிா்க்கட்சிகள் கூட்டணி வெற்றிபெற அதிகவாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் பாஜக முன்னாள் எம்.பி. சிசுபால் படேல் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸில் இணைந்தாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் பல குழப்பங்கள் உள்ளன. பாஜகவில் உள்ள எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் பலா் பேரவைத் தோ்தலுக்கு முன்பு காங்கிரஸில் இணைவாா்கள்’ என்றாா்.

காங்கிரஸில் இணைந்த சிசுபால் படேல் பேசுகையில், ‘மாநில பாஜக ஒப்பந்ததாரா்கள் மற்றும் பெரும் வியாபாரிகளுக்கான கட்சியாக மாறிவிட்டது. விவசாயிகள், உழைக்கும் மக்களுடன் அக்கட்சிக்கு எவ்வித தொடா்பும் இல்லை. எனவே, மக்களுக்காகப் பணியாற்ற காங்கிரஸில் இணைந்துள்ளேன். எதிா்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தூண்டி விடுகிறது’ என்றாா்.