குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றதற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளா் அறிக்கையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஏ+ தரநிலையில் இடம்பெற்றுள்ளாா். அவரின் மிகச்சிறந்த செயல்பாட்டையொட்டி, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அந்த தரநிலையில் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.