பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மீண்டும் மீண்டுமா? விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பாஜக விளக்கம்!

விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பாஜக விளக்கம்

News image

பிரசாரத்தில் கங்கனா (கோப்புப் படம்) - ANI

Updated On :26 ஆகஸ்ட் 2024, 5:01 pm IST

விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பாஜக தலைமை அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத்தின் கருத்துகள் கட்சியின் கருத்து இல்லை என்றும், பாஜக விளக்கம் தெரிவித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில், மத்திய அரசு எடுத்த வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், விவசாயிகளின் போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடி போன்றதொரு நிலையை இந்தியாவில் ஏற்பட வழிவகுத்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஒரு நாளுக்குப் பிறகு அவரது கருத்துக்கு பாஜகவின் மறுப்பு வெளியாகியிருக்கிறது.

அதாவது, "கங்கனா ரணாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களில் பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கங்கனா ரணாவத்துக்கு பாஜக அறிவுறுத்தியிருக்கிறது" என்று பாஜக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், கடந்த காலங்களிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் குறித்து பல அதிருப்தி தரும் கருத்துகளை வெளியிட்டு கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, போராட்டத்தில் பங்கேற்ற பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பெண் விவசாயியை, கங்கனா ரணாவத், தவறாக அடையாளம் சொன்னதோடு, இவர் நூறு ரூபாய் கொடுத்தால் போராட்டங்களில் பங்கேற்க வருவார் என்று கூறி கடும் எதிர்ப்பைப் பெற்றுக்கொண்டிருந்தார். இந்த பேச்சினால் ஆத்திரமடைந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில், கன்னத்தில் அறைந்ததும் தலைப்புச்செய்தியாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.