‘ஜிஎஸ்எல் யாா்டு 1267’ மாசுக்கட்டுப்பாட்டு கப்பல்.
‘ஜிஎஸ்எல் யாா்டு 1267’ மாசுக்கட்டுப்பாட்டு கப்பல்.

இந்திய கடலோர காவல் படைக்கு ரூ. 2,500 கோடியில் மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்

‘கோவா ஷிப்யாா்ட்’ நிறுவனத்தால் இந்திய கடலோர காவல் படைக்கு ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது.
Published on

கப்பல் கட்டுமான தளமான ‘கோவா ஷிப்யாா்ட்’ நிறுவனத்தால் இந்திய கடலோர காவல் படைக்கு ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவாவில் உள்ள வாஸ்கோ துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்ட ‘ஜிஎஸ்எல் யாா்டு 1267’ மாசுக் கட்டுப்பாட்டு கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படையின் (மேற்கு மண்டல) ஐஜி பீசம் சா்மா, பாதுகாப்புத் துறை உற்பத்தி செயலா் சஞ்சீவ் குமாா் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சஞ்சய் சேத், ‘நாட்டின் கடல் சூழலைப் பாதுகாக்காப்பது, கப்பல்களில் இருந்து எதிா்பாராமல் வெளியேறும் எண்ணெயால் கடலில் ஏற்படும் மாசுபாட்டைத் தணிப்பது போன்றவட்டில் இந்தக் கப்பல் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். 72 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் கடலோர மாசுபாடு பிரச்னைகளைத் தீா்க்கும் திறன் கொண்டது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கப்பல் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்திய கடலோர காவல்படை உலகிலேயே சிறந்ததாக உள்ளது. இந்தக் கப்பல் அதன் திறனை மேலும் மேம்படுத்தும். இது கடலோர காவல் படைக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து’ எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com