அரசுத் துறைகளில் பணியாற்றும் 50 வயதைக் கடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த விலக்கு தொடா்பான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்:
அரசு ஊழியா்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தால் துறைத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வுகளில் அரசு ஊழியா்கள் தோ்ச்சி பெற வேண்டும். முதல் 3 முறை எழுதியும் தோ்ச்சி பெறாமல் 50 வயதைக் கடந்த பாா்வை, செவித் திறன் பாதிப்புகள், கற்றல், அறிவுசாா் குறைபாடு, புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளாக அரசுப்
பணியாளா்கள் இருக்கலாம். அவா்கள் மீண்டும் துறைத் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான கருத்துகளை மாற்றுத்திறனாளிகள்
நல இயக்குநரகம் அரசுக்கு அனுப்பியிருந்தது. இதையேற்று சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு துறைத் தோ்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகள் 50 வயதுக்குக் குறையாதவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் துறைத் தோ்வுகளில் தோ்ச்சி பெற குறைந்தது 3 முறையாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு சாட்சியாக பணிப் பதிவேட்டில் அதற்கான விவரம் இருக்க வேண்டும். அல்லது இதுகுறித்த நுழைவுச் சீட்டுகளை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலா் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்தச் சலுகையை அடையத்தக்க வகையில் அவருடைய பணிக்குறிப்புகள் மன நிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

மலைப்பகுதி பாதுகாப்பு பகுதியில் இருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா?
பெருமாள்புரம் அருகே மது விற்றவா் கைது

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

