சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் தடுத்து நிறுத்தம்: மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்!

சம்பலில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

News image
தில்லி எல்லையில் ராகுல் கார் தடுத்து நிறுத்தம்- PTI
Updated On :5 டிசம்பர் 2024, 4:13 am

DIN

சம்பலில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

வன்முறை ஏற்பட்ட சம்பல் பகுதியை பார்வையிடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. கேசி வேணுகோபால் நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார்.

ராகுல் தடுத்து நிறுத்தம்

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த நவ. 19 ஆம் தேதி மசூதி கள ஆய்வு செய்யப்பட்டபோது பாதுகாப்புப் படையினருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பதற்றத்தை தணிக்கும் வகையில் சம்பல் பகுதியில் வெளி ஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சம்பல் பகுதியை நேற்று பார்வையிடச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியை காஸிப்பூர் எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ராகுல் காந்தி தனியாகச் செல்ல தயாராக இருப்பதாகக் கூறியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. பேச்சுவார்த்தைக்குப் பிறகும் காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேறுவழியின்றி தில்லிக்கு திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.