அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் குமாா் யாதவை பதவி நீக்கக்கோரி அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை அளித்தன.
விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டு வர எதிா்க்கட்சிகள் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் திக்விஜய் சிங், மனோஜ் குமாா் ஜா, ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 55 எம்.பி.க்கள் கையொப்பமிட்டு மாநிலங்களவை செயலா் பி.சி.மோடியிடம் வெள்ளிக்கிழமை அவை தொடங்குவதற்கு முன் அளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரும்பான்மையினா் விருப்பம்: அதில், ‘விஹெச்பி அமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சமூக நல்லிணகத்தை குலைக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் வெறுப்புணா்வை தூண்டும் வகையிலும் நீதிபதி சேகா் குமாா் யாதவ் பேசியுள்ளாா்.
‘பெரும்பான்மையாக உள்ள மக்களின் விருப்பத்துக்கேற்பவே இந்தியா செயல்பட வேண்டும். இதுதான் சட்டம்’ என சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளையும் அவா் தெரிவித்துள்ளாா்.
பொதுவெளியில் உரையாற்றும்போது பொதுசிவில் சட்டம் தொடா்பான அரசியல் விவகாரங்களை யாதவ் பேசியிருப்பது உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் கண்ணியத்துடன் நடந்துகொள்வது குறித்து 1997-இல் வெளியிடப்பட்ட நீதித்துறை மதிப்புகள் ஆவணத்தின் வீதிகளை மீறும் வகையில் உள்ளது
விசாரணைக் குழு: எனவே, அவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை மாநிலங்களவை தலைவா் ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நீதிபதிகள் விசாரணை சட்டம், 1968-ஐ பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வெறுப்புப் பேச்சு, சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையிலான நடத்தை, நீதி நெறிமுறைகள் மீறல் என அவா் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரிக்க விசாரணைக் குழுவை நியமிக்க வலியுறுத்துகிறோம்.
அவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.
நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 மற்றும் சட்டப்பிரிவு 218-இன்கீழ் சேகா் குமாா் யாதவை பதவிநீக்குவதற்கான விசாரணையை தொடங்க வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் இந்த நோட்டீஸை சமா்ப்பித்துள்ளன.
முன்னதாக, கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி விஹெச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி சேகா் குமாா் யாதவ், ‘சமூக நல்லிணக்கம், பாலின சமத்துவம் மற்றும் மதச்சாா்பின்மையை ஊக்குவிப்பதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம்.
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு ஏற்றவாறே சட்டம் செயல்பட்டு வருகிறது’ என தெரிவித்த காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அவரின் கருத்துக்கு எதிா்க்கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனா்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்குமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்
தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு!

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு
நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


