பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உ.பி.: சம்பலில் 45 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட கோயில்!

1978-ஆம் ஆண்டு மூடப்பட்ட சிவாலயம் இப்போது திறக்கப்பட்டுள்ளது..

PTI

Published On :

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட கோயிலொன்று இன்று(டிச. 14) திறக்கப்பட்டுள்ளது.

கக்கு சாஅராய் பகுதியிலுள்ள இந்த சிவாலயம், கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப்பின் திறக்கப்படாமல் பராமரிப்பின்றி மூடப்பட்ட நிலையில் இருந்தது. காலப்போக்கில் கோயிலைச் சுற்றி மக்கள் குடியிருப்புகளைக் கட்டி வசிக்கத் தொடங்கியதால், கோயில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளது. இந்த நிலையில், சுமார் 45 ஆண்டுகளுக்குப்பின் இப்போது திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பல ஆண்டுகளுக்குப்பின் கோயில் திறக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறை உயரதிகாரியொருவர் கூறியதாவது, “கோயில் அமைந்திருக்கும் இந்த பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையால் இந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சிதிலமடைந்த நிலையில் கோயிலிருப்பதை கண்டறிந்தோம்.

இதனையடுத்து கோயிலைத் திறந்து உள்ளே சென்று ஆய்வு செய்து வருகிறோம். கோயில் இருக்கும் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்ற நடவடடிக்கைகள் எடுக்கப்படும். கோயிலின் அருகமையிலுள்ள கிணறு ஒன்றும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று இதே சம்பல் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஷாஹி ஜாமா மஸ்ஜித் மசூதியில் நீதிமன்றம் ஆய்வு நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மசூதி அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டதால் அப்பகுதியில் வன்முறை மூண்டது. கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தால் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.