மஹாயுதி வெற்றிக்குப் பிறகு தனது சொந்த ஊரான நாக்பூருக்கு ஞாயிற்றுகிழமை சென்ற முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாக்பூரில் பாஜக தொண்டர்களால் நடத்தப்பட்ட பேரணிக்கு ஃபட்னவிஸ் தலைமை தாங்கினார். நாக்பூர் விமான நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, தரம்பேத்தில் உள்ள ஃபட்னவிஸின் இல்லத்தில் முடிவடைந்தது. ஃபட்னவிஸ், அவரது மனைவி அம்ருதா ஃபட்னவிஸ், பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்ளிட்டோர் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் சென்றனர்.

SUNNY SHENDE
பேரணியின் போது வழிநெடுக பதாகைகள் ஏந்தி ஃபட்னவிஸை கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர். முன்னதாக நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவிஸ், முதல்வரான பிறகு எனது ஜென்மபூமி மற்றும் கர்மபூமிக்கு (பிறந்த இடம் மற்றும் பணியிடம்) வந்திருப்பது மகிழ்ச்சியான தருணம்.
நாக்பூர் எனது குடும்பம். அதனால் எனது குடும்பத்தினர் வரவேற்கிறார்கள். அரசியல் சாசனத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. மஹாயுதியை ஆசிர்வதித்து என்னை முதல்வராக்கியதற்காக 14 கோடி மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தங்களுக்கு சேவை செய்யவும், தங்கள் வாழ்க்கையையும், மகாராஷ்டிரத்தையும் மாற்ற மஹாயுதியைத் தேர்ந்தெடுத்தனர் என்றார். அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மஹாயுதி கூட்டணி வெற்ற பெற்று ஃபட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் தீர்ப்புக்கு முதல்வர் விஜய் வரவேற்பு!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



