நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்

3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு வருகை...

PTI

Updated On :

புதுதில்லி: மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபரிடம் எழுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

இந்த நிலையில், மீனவர்கள் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ’இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் எதிர்பாராதவிதமாகக் கடந்துவிடும் இந்திய மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தை தங்களின் கனிவான கவனத்தில் எடுத்துக்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.’

மீனவர்கள் விடுதலை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மீனவர் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடியுடன் திசநாயக இன்று(டிச .16) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.