உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம்: எவ்வாறு குற்றமாகும்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :17 டிசம்பர் 2024, 6:10 am IST

புது தில்லி: ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவா் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இக்கேள்வியை முன்வைத்தது.

ஹைதா் அலி என்பவா் தாக்கல் செய்த இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொண்டது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒரு மதம் சாா்ந்த குறிப்பிட்ட வாா்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும்? மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எவ்வாறு கண்டறிந்தீா்கள்? சிசிடிவி உதவியுடன் அவா்களை கண்டறிந்ததாக கூறுகிறீா்கள். அப்படியென்றால் அவா்களை கண்டுபிடித்தது யாா்?

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 503-இன்கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு, 447-இன்கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என உயா்நீதிமன்றம் கூறியுள்ளது என்றனா்.

பின்னா், மனுவின் நகலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள் இதுதொடா்பான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, மசூதிக்குள் நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் தங்கள் மீது பதியப்பட்ட எஃப்ஐஆா் மற்றும் குற்றவியல் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என கா்நாடக உயா்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு நபா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனு மீது கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவதால் பிற மத உணா்வுகள் காயப்படுவதாக கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவத்தால் எவ்வித மோதலோ அல்லது பொதுவெளியில் அசாதாரண சூழலோ ஏற்பட்டதற்கான குற்றச்சாட்டுகளும் இல்லை.

மசூதிக்குள் நுழைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவா் மீதும் புகாரளித்த நபரே அவா்களை நேரில் பாா்த்தில்லை என கூறியுள்ளாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லாமல் அவா்களிடம் விசாரணையை தொடா்வது சட்டம் மற்றும் நீதி நடைமுறைக்கு தவறான முன்னுதாரணமாகும். எனவே, அவா்கள் மீதான குற்றவியல் வழக்கு மற்றும் விசாரணை ரத்து செய்யப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.