டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

முதியோர்களுக்கு இலவச சிகிச்சை: ஆம் ஆத்மி அதிரடி!

முதியோர்களுக்கு இலவச சிகிச்சை .. ஆம் ஆத்மி அறிப்பு..

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :18 டிசம்பர் 2024, 9:58 am

DIN

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபிறகு வயதான முதியோர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் அதிரடி திட்டத்தை புதன்கிழமை அறிவித்தார்.

தலைநகர் தில்லியில் 2025 பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னரே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, இன்று முதியோர்களுக்கான புதிய அறிவிப்பை ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் 'சஞ்சீவ்னி யோஜ்னா' தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று இந்தத் திட்டத்திற்கு தகுதியான முதியோர்களை பதிவு செய்வார்கள் என்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

தேர்ந்தலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி சஞ்சீவ்னி திட்டத்தைச் செயல்படுத்தும் என்று கேஜரிவால் கூறினார்.

முன்னதாக தில்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்காக முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜானவைத் தொடங்குவதாக அறிவித்தார். மேலும் தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகை ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து தற்போது முதியோர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி 11 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நவம்பர் 21ஆம் தேதியும், 20 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியலை டிசம்பர் 9-ஆம் தேதியும் அறிவித்துள்ளது. தில்லி பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்ற பெற முடியவில்லை. தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வரானார்.

ஆனால், அரவிந்த் கேஜரிவால் ஆட்சியில், பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. இறுதியாக தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். இதன் மூலம், முதல்வராக இருக்கும்போது ஒருவர் கைதாவது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.

பின்னர், முதல்வர் பதவியை கேஜரிவால் ராஜிநாமா செய்தார். இதன்பிறகு தில்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.