பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இந்திய மனிதவளமும் திறனும் புதிய குவைத்தை உருவாக்க உதவும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி குவைத்தில் பேசியது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - PTI

Published On :21 டிசம்பர் 2024, 9:50 pm IST

குவைத் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி புதிய குவைத்துக்குத் தேவையான மனிதவளமும், திறனும் இந்தியாவிடம் உள்ளன என்று உறுதியளித்துள்ளார்.

குவைத் மன்னா் ஷேக் அல் அகமது அல் ஜாபா் அல் ஷபா அழைப்பை ஏற்று பிரதமா் மோடி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் அந்நாட்டு முக்கியத் தலைவா்களுடன் பிரதமா் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரை இன்று பிரதமர் மோடி சந்தித்தார்.

கடந்த 43 ஆண்டுகளில் வளைகுடா நாட்டிற்குச் செல்லும் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

அடுத்த சில வாரங்களுக்குக் கொண்டாடப்பட இருக்கும் பண்டிகைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, “இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், இந்தியப் பிரதமர் குவைத் வருவதற்கு 43 ஆண்டுகள் ஆகியுள்ளது.

நீங்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளீர்கள். ஆனால் உங்களைப் பார்த்தால், இங்கே ஒரு சிறிய இந்தியா தோன்றிவிட்டது போல உணர்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குவைத் வருகிறார்கள். நீங்கள் குவைத் சமூகத்திற்கு இந்தியத் தொடர்பைச் சேர்த்துள்ளீர்கள். இந்தியத் திறமை, தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைக் கலந்து, குவைத்தின் படிக்கட்டுகளில் இந்திய திறன்களின் வண்ணங்களை நிரப்பியிருக்கிறீர்கள்” என அவர் பேசினார்.

மேலும், புதிய குவைத்துக்கு தேவைப்படும் மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.