6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹரியாணா: செங்கல் சூளையின் சுவர் இடிந்ததில் 4 குழந்தைகள் பலி!

செங்கல் சூளையின் சுவர் இடிந்ததில் நிகழ்ந்த சோகம்..

News image
சுவர் இடிந்து விழுந்தது
Updated On :23 டிசம்பர் 2024, 10:09 am

DIN

ஹரியாணாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புடானா கிராமத்தில் செங்கல் சூளையிள் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.

நார்நாவுண்ட் காவல் நிலையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இறந்தவர்கள் நிஷா(3 மாதங்கள்) சூரஜ் (9) நந்தினி (5) மற்றும் விவேக் (9) என அடையாளம் காணப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் குடும்பங்கள் புடானாவில் உள்ள செங்கல் சூளையில் வேலைசெய்து வருகின்றனர்.

சிம்னி அருகே செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் நடந்து வருகிறது. செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​செங்கல் சூளையின் சுவர் அவர்கள் மீது இடிந்து விழுந்தது.

சூரஜ், நந்தினி மற்றும் விவேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், நிஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கௌரி என்ற 5 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் ஹிசார் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐந்து குழந்தைகளும் உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பதாவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.