ராம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் புரான்பூர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை பஞ்சாப் மாநிலத்துக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமை இரவு ராம்பூர் புறவழிச்சாலையில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் ஆம்புலன்ஸ் சேதமடைந்ததைத் தொடர்ந்து வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடல்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா கூறுகையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள மார்கி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையின் கூட்டுக்குழுவினர் அந்த பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பதிலடியாக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர், பின்னர் அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு ராம்பூர் புறவழிச்சாலையில் பிலிபித்தில் இருந்து பஞ்சாப் நோக்கி பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராம்பூர் போலீசார், சேதமடைந்த ஆம்புலன்ஸில் இருந்த உடல்களை மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் மாற்றி எடுத்துச் சென்றனர்.
பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேட காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில் குர்தாஸ்பூரில் உள்ள காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 3 பயங்கரவாதிகளை திங்கள்கிழமை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் புரான்பூர் காவல் நிலையம் மீது கையெறி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டபட்ட குர்விந்தர் சிங், ரவி (எ) வீரேந்தர் சிங் மற்றும் பிரதாப் சிங் என்ற ஜஸ்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு பிஸ்டல்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
2 டன் வெள்ளைக் கற்களை வெட்டி எடுத்துச் சென்றவா்கள் மீது புகாா்

நடைபயிற்சி சென்ற இளைஞா் வாகனம் மோதி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி காவலா் உயிரிழப்பு, ஏஎஸ்ஐ படுகாயம்

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த வேன்; இருவா் காயம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



