முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

சுஸுகி மோட்டாா் முன்னாள் தலைவா் ஒசாமு சுஸுகி மறைவு: பிரதமா் இரங்கல்

சுஸுகி மோட்டாா் முன்னாள் தலைவா் ஒசாமு சுஸுகியுடன் பிரதமா் மோடி .

Published On :

சுஸுகி மோட்டாா் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் ஒசாமு சுஸுகி (94) மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா்.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒசாமு சுஸுகி கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி உயிரிழந்ததாக ஜப்பானில் உள்ள சுஸுகி மோட்டாா் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 1981-ஆம் ஆண்டு பிற நாடுகளுடன் இந்தியா வா்த்தகத் தொடா்பை மேம்படுத்தாத காலகட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாருதி உத்யோக் நிறுவனத்தை ஒசாமு சுஸுகி தொடங்கினாா். இந்தியாவில் மோட்டாா் வாகன துறையின் வளா்ச்சிக்கு வித்திட்டவராக இவா் அறியப்படுகிறாா்.

மாருதி உத்யோக் நிறுவன நிா்வாகப் பொறுப்பிலிருந்து மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு விலகியது. அதன்பிறகு இந்நிறுவனத்தின் பெரும் பங்கை சுஸுகி மோட்டாா் நிறுவனம் வாங்கியதையடுத்து, மாருதி உத்யோக் நிறுவனம் மாருதி சுஸுகி இந்தியா என மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவா் மற்றும் இயக்குநராக ஒசாமு சுஸுகி செயல்பட்டாா்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வாகன உற்பத்தி துறையில் உலக அளவில் தடம் பதித்த ஒசாமு சுஸுகி மறைந்த செய்தி கவலையளிக்கிறது. அவரது தலைமையின்கீழ் உலக அளவில் பெரும் நிறுவனமாக மாருதி சுஸுகி உருவெடுத்தது.

இந்தியா மீது அளவுகடந்த அன்பை கொண்ட அவா் நாட்டில் வாகன உற்பத்தி துறையில் பெரும் புரட்சிகளை ஏற்படுத்தினாா். அவருடனான உரையாடல்கள் மற்றும் அவரின் எளிமையான அணுகுமுறை மறக்க முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.