கதிஹார் (பிகார்): அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு மட்டுமின்றி, இந்திய ராணுவத்தின் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கும் இழைக்கும் துரோகம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "ஏற்கனவே ஆயுதப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். அக்னிபத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிகாரின் கதிகாரில் புதன்கிழமை தனது இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் போது ராணுவத்தில் சேர பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த சில ஆர்வமுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடலின் போது ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிக்க | எங்கள் 'ஐசிஎஃப் மனிதனுக்கு' வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேலும் "கடந்த 40-50 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்ததால் நாட்டில் பரவலாக வேலையில்லாத்திண்டாட்டம் நிலவுகிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நீதி யாத்திரை சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதி வழங்குவதற்காகவும் என்று காந்தி கூறினார்.
பிகாரில் இருந்து மேற்கு வங்கம் புறப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.