குருகிராம்: கந்த்சா காய்கறி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் பிற காய்கறிகள் என பல லட்சம் மதிப்புள்ள 20,000 கூடைகள் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
நேற்று இரவு 7 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்தும், அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் போராடி அணைத்ததனர். தீயானது இரவு சுமார் 11.56 மணியளவில் அணைக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக யாரோ தங்கள் கடைகளுக்கு தீ வைத்துள்ளதாக கடைக்காரர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து கந்த்சா காய்கறி சந்தையின் முன்னாள் தலைவர் கிருஷ்ணா யாதவ் தெரித்ததாவது:
போட்டி காரணமாக ஒரு கடைக்கு தீ வைக்கப்பட்டதாகவும், அது அருகிலுள்ள கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டது. எனது கடையில் மட்டும் சுமார் 17,000 தக்காளி பெட்டிகள் எரிந்து சாம்பலானது.
இது தவிர, மற்ற கடைக்காரர்களின் ஆயிரக்கணக்கான பெட்டிகளும் தீயில் எரிந்து சாம்பலானது என்றார் காவல் துறை அதிகாரி ஒருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவில் மீண்டும் வாக்குச் சீட்டுகள் மூலம் தோ்தல்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

