மகாராஷ்டிர மருத்துவமனைகளில் போலி மருந்துகள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட  போலி மருந்துகள் குறித்து மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.
மகாராஷ்டிர மருத்துவமனைகளில் போலி மருந்துகள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரித்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட  மோசடியை அந்த மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.

நாக்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து சுமார் 21 ஆயிரம் போலி ஆன்டிபயாடிக் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து ஆண்டிபயாடிக் மருந்தான சிப்ரோஃப்ளோக்சசின் என்ற  21,600 போலி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதேபோன்ற வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ள தாணேயைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அரசு ஒப்பந்த முறை மூலம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்கப்பட்டதாகவும், அதில் நடந்த மோசடி குறித்து கண்டறியப்பட்டுள்தாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டதாகவும், இது மாவட்டத்தில் அரசு நடத்தும் மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்கும் நிறுவனத்தினால் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி கூறுகையில், கடந்த மார்ச் மாதம் ஆன்டிபயாடிக் மாத்திரையின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டதில், அதில் எந்த மருந்தும் இல்லை என்று கடந்த டிசம்பரில் முடிவு வெளியானது இதைத் தொடர்ந்தே சோதனை செய்யப்பட்டு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, மருந்து தயாரித்த நிறுவனம் போலியான பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படி ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனமே இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படும் சிப்ரோஃப்ளோக்சசின் என்ற போலி மாத்திரைகள் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எஃப்.டி.ஏ. அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com