பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றம்!

சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம், சீனாவில் இருந்துவந்த நிலையில், அதன் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :9 பிப்ரவரி 2024, 7:11 pm IST

குவஹாத்தி : சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின்(சிஐடிஎஸ்) தலைமையிடத்தை இந்தியாவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர் கூட்டமைப்பின் தலைமையிடம், சீனாவில் இருந்துவந்த நிலையில், தற்போது அதன் தலைமையிடம் இந்தியாவுக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அவையின் கீழ் இயங்கும் ’உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(எஃப்ஏஓ) தேயிலைக்கான சர்வதேச அரசுகளின் குழுவின் 25-வது அமர்வு அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், அப்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அவையின் கீழ் இயங்கும் ’உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்(எஃப்ஏஓ) தேயிலைக்கான சர்வதேச அரசுகளின் குழுவின்’ தலைமைப் பொறுப்பிலிருந்த பிரிட்டனிடமிருந்து, அதன் தலைமைப் பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இரண்டாண்டுகள் தலைமைப் பதவி வகிக்கும் இந்தியாவை தொடர்ந்து, இதன் தலைமைப் பதவியை இலங்கை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.