தோனி வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
தோனி வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து அதுகுறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி ரூ. 100 கோடி மான நஷ்டஈடு கோரி தோனி 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், காவல் துறை அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். 

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து, மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழங்கிய சிறைத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் எம்.எஸ்.தோனி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com