ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவை ராகுல் காந்தி சந்தித்தார்.
ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரின் மனைவி கல்பனா சோரனை, ராஞ்சியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.

ராகுல் காந்தி, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவை சந்தித்த புகைப்படத்தை காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

பேரவையில் சம்பயி சோரன் தலைமையிலான அரசுக்கு 47 வாக்குகள் ஆதரவாகவும், 29 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.

சட்டப்பேரவையில் உறுப்பினரளின் பெரும்பான்மை பெற்றதால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள சம்பயி சோரன் தலைமையிலான அரசு ஆட்சி உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com