ஞானவாபி மசூதியில் பூட்டப்பட்டுள்ள தளங்களில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தக்கோரி மனு தாக்கல்

ஞானவாபி மசூதி வளாகத்தினுள் பூட்டப்பட்டு கிடக்கும் அனைத்து தளங்களிலும்  தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில்  புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  
ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

வாரணாசி : ஞானவாபி மசூதி நிா்வாகத்தால் அங்குள்ள நிலவறை கடந்த 1993-ஆம் ஆண்டு மூடப்படும் வரை, பூஜைகளை செய்துவந்த பூஜாரி சோம்நாத் வியாஸின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி சோம்நாத் வியாஸின் பேரனான சைலேந்திர குமாா் பாடக் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று மசூதி வளாக நிலவறையில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த அனுமதி வழங்கிய வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறை கடந்த வாரம் திறக்கப்பட்டு அங்கு வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன.   

இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தினுள் பூட்டப்பட்டு கிடக்கும் அனைத்து தளங்களிலும்  தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில்  புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  விஸ்வ வேதிக் சநாதன சங்கத்தை சேர்ந்த ராக்கி சிங்  தாக்கல் செய்துள்ள இந்த மனு நாளை(பிப்.6)  வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் அனைத்து மூடிய தளங்களையும் திறந்து ஆய்வு நடத்த அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஞானவாபி மசூதி வளாகத்தின் அடித்தளங்களில், ரகசிய அறைகள் இருப்பதாகவும் அவற்றையும் திறந்து ஆய்வு நடத்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஞானவாபி மசூதி குறித்த அனைத்து விவரங்களும் வெளிவரும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com