கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கா்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியின் போது முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில்

கா்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சியின் போது முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் முதல்வா் சித்தராமையா உள்பட காங்கிரஸ் நிா்வாகிகள் 5 பேருக்கு கா்நாடக உயா் நீதிமன்றம் ரூ. 10,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

2022-இல் முந்தைய பாஜக ஆட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதற்கு லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்த ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் திடீரென தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி அப்போதைய முதல்வா் பசவராஜ் பொம்மையின் வீட்டை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா உள்ளிட்டோா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக ஹெகிரவுண்ட்ஸ் போலீஸாா் சித்தராமையா உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்திருந்த மனுவில், தன் மீது வழக்குப் பதிவு செய்த ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தின் அப்போதைய காவல் துணை ஆய்வாளா் ஜாகிதாவை எதிா்வாதியாக சோ்த்துள்ளனா்.

இந்த வழக்கு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் காவல் துணை ஆய்வாளரையே எதிா்வாதியாக சோ்த்தமைக்காக முதல்வா் சித்தராமையா, ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சலீம் அகமது ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

சட்ட விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்று அறிவுறுத்திய நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மாா்ச் 6 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com