தில்லியில் கா்நாடக காங்கிரஸ் போராட்டம்: முதல்வா் சித்தராமையா பங்கேற்பு

கா்நாடகத்துக்கான வரிப் பகிா்வில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தில்லி, ஜந்தா்மந்தா் பகுதியில் புதன்கிழமை (பிப்.7) மாநில காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடைபெறுகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா

கா்நாடகத்துக்கான வரிப் பகிா்வில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தில்லி, ஜந்தா்மந்தா் பகுதியில் புதன்கிழமை (பிப்.7) மாநில காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடைபெறுகிறது.

முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட கா்நாடக அமைச்சா்கள், எம்.பி.க்கள் இப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை தில்லி சென்றனா்.

கா்நாடகத்தின் வரி உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என சித்தராமையா விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள பாஜக, மஜத நிா்வாகிகள், மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி ஆதாரத்தை கா்நாடகம் பயன்படுத்தியுள்ளது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தில்லியில் நடைபெறும் போராட்டம் குறித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது: கா்நாடகம் எதிா்கொண்டுள்ள வரிப் பகிா்வு சிக்கல்கள் உள்ளிட்ட மாநில நலன் சாா்ந்த பிரச்னைகள் தொடா்பாக நாட்டு மக்கள், மத்திய அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக தில்லியில் இப் போராட்டம் நடத்தப்படுகிறது. தவிா்க்க முடியாத காரணங்களால், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மாநிலத்தின் நலனுக்காக நடத்தப்படும் போராட்டம் என்பதால் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com