ஹிமாசல பிரதேசம் சிம்லாவில் செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜுங்கா சாலையில் அஷ்வணி குட் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட ராக்கேஷ் (31) மற்றும் ராஜேஷ் (40) ஆகிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இரண்டு தொழிலாளர்களும் பிகார் மாநிலத்தைச் சேந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல் உடைக்கும் இயந்திரங்களுக்கு அருகே தற்காலிகக் குடிசைகள் அமைத்து சில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: கேஜரிவாலின் தனிச்செயலர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் நூலிழையில் தப்பித்திட, இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.