அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிதிஷ் குமார்!
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியுடன் உறவை முறித்துக்கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்த பிறகு, தனது முதல் தில்லி பயணத்தில் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்தார்.
இந்த நிலையில், 96 வயதான அத்வானிக்கு கடந்த வாரம் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது. இதையடுத்து முதல்வர் நிதிஷ் குமார் அத்வானியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, ஜனதா தளம்(யுனைடெட்) தலைவர் அத்வானியை 2013ல் இருந்து பலமுறை பாஜக உடனான உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும், அவருடனும் முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயுடனும் இருந்த உறவுகளை நினைவு கூர்ந்தார் அத்வானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...