முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது!

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும்  சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது!

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும்  சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், "நமது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு சிறந்த அரசியல்வாதியாக, நரசிம்ம ராவ் அவர்கள் பல்வேறு பதவிகளில் இருந்து பணியாற்றினார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் நினைவில் உள்ளது. 

அவரது தொலைநோக்கு பார்வை இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற்றி, நாட்டின் வளத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதியான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகித்தது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், முக்கியமான மாற்றங்களின் மூலம் இந்தியாவை வழிநடத்தியது" எனத் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கும் பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் அவரது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com