2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

திரிபுரா அமைச்சரவை விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும்: முதல்வர்

திரிபுரா மாநில அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து பால ராமரை பூஜை செய்வார்கள் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்தார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2024, 6:26 am

DIN

திரிபுராவிலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு ரயிலை முதல்வர் புதன்கிழமை இரவு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அயோத்திக்கு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அகர்தலா ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி செல்லும் சிறப்பு ரயிலைக் கொடியசைத்துத் துவக்கிவைத்த பிறகு, திரிபுராவிலிருந்து 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

முதல்வர் கூறுகையில், பிப்ரவரி 5ஆம் தேதி திரிபுரா அமைச்சரவை அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதிக கூட்டம் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

முழு திரிபுரா அமைச்சரவையும் விரைவில் அயோத்திக்குச் சென்று ராமரை தரிசனம் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.