ஆகாஷா ஏர்ANI
இந்தியா
மும்பை- கத்தார் இடையே புதிய விமான சேவை!
ஆகாஷா ஏர் நிறுவனம் தனது பன்னாட்டு விமான சேவையைத் தொடங்கவுள்ளது.
ஆகாஷா ஏர் நிறுவனம் தனது பன்னாட்டு விமான சேவையை மார்ச் 28 முதல் தொடங்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
“கத்தார் மற்றும் இந்தியா இடையிலான வான்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மும்பை முதல் தோஹா வரை வாரத்திற்கு நான்கு நாள்கள் இடை நில்லா விமானங்களை ஆகாஷா ஏர் மார்ச் 28 முதல் செயல்படுத்தவுள்ளோம்” என நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகாஷா ஏர் நிறுவனத்தி்ன் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே, கத்தார் செல்லும் இந்த முன்னெடுப்பு, ஆகாஷா ஏர் நிறுவனத்தின் அடுத்த வளர்ச்சி என்றும் உலகின் சிறந்த 30 விமான நிறுவனங்களுள் அடுத்த பத்தாண்டில் ஆகாஷா ஏர் நிறுவனமும் ஒன்றாக உயரும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2022 முதல், 23 எண்ணிக்கையிலான போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.