/

அமேதியில் ராகுல் காந்தி நடைப்பயணம்!

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

News image
- DOTCOM
Updated On :19 பிப்ரவரி 2024, 10:39 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. மேகாலயா, அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், 2004 முதல் 15 ஆண்டுகள் எம்பியாக இருந்து 2019ஆம் ஆண்டு ராகுல் காந்தி தோல்வியை சந்தித்த அமேதியின் இன்று நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமேதிக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராஜீவ் காந்தி 4 முறையும், சோனியா காந்தி ஒரு முறையும் மக்களவைக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.