காங்கிரஸ் - சமாஜவாதி இடையே பிரச்னையில்லை!

ராகுலின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் பிகார் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் இன்று நுழைந்தது.
செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கும் மல்லிகார்ஜுன கார்கே
செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கும் மல்லிகார்ஜுன கார்கே

சமாஜவாதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தவித முரண்பாடுமில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணம் பிகார் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் இன்று நுழைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்தியுடன் பங்கேற்றனர்.

அமேதியில் நடைபெற்ற ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகைப் புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் எங்களுக்கும் (காங்கிரஸ்) இடையே எந்தவித கருத்து மோதலுமில்லை. அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது. தொகுதிப் பங்கீடை அகிலேஷ் ஏற்றுக்கொண்டார். எங்கள் தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எங்களுக்கு இடையே எந்தவித பிரச்னையுமில்லை எனக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து இன்று பிகாரிலிருந்து உத்தரப் பிரதேசம் நுழைந்தது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை வரையறை செய்த பிறகு ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்பதாக உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் இன்று காலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com