அரசியலில் நம்பகத்தன்மை நெருக்கடிக்கு பாஜக முற்றுப்புள்ளி: ராஜ்நாத் சிங்

நாட்டை ஆள்வதற்காக மட்டும் அல்ல, மக்களுக்குச் சேவை செய்யவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும் அரசியல் செய்கிறோம்.
நான்கு மக்களவைத் தொகுதி தொண்டர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்
நான்கு மக்களவைத் தொகுதி தொண்டர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் உருவாக்கிய அரசியலில் நம்பகத்தன்மை நெருக்கடிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஒடிசாவில் நபரங்பூர், கலஹண்டி, கோராபுட் மற்றும் போலங்கிர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதி தொண்டர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாததால் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால் பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. எனவே, அரசியலில் நம்பகத்தன்மை நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.

நான்கு மக்களவைத் தொகுதி தொண்டர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: அதிமுக வெளிநடப்பு!

பிரதமர் மோடியின் மீது மக்கள் தற்போது நம்பிக்கை வைத்துள்ளனர்.

தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் மறந்துவிட்டதாக அவர் கூறினார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில்... 370-வது பிரிவை நீக்குதல், முத்தலாக் முடிவு மற்றும் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் என அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நான்கு மக்களவைத் தொகுதி தொண்டர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்
தில்லி முதல்வருக்கு மீண்டும் புதிய சம்மன்!

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, பாஜக வாக்குறுதி அளித்ததைச் செய்கிறது என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

பாஜக நாட்டை ஆள்வதற்காக மட்டும் அல்ல, மக்களுக்குச் சேவை செய்யவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும் அரசியல் செய்கிறோம் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com