பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அருணாசல பிரதேசம்: பாஜகவில் இணைந்த 4 எம்எல்ஏக்கள்

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 9:57 am

DIN

அருணாசல பிரதேசத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாசலில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 பேரவைத் தேர்தலில் பாஜக 41 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

மேலும் மாநிலத்தில் நடப்பாண்டிலேயே பேரவை மற்றும் மக்களவைக்கும் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அருணாசலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த தலா இரண்டு எம்எல்ஏக்கள் என மொத்தம் 4 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பெமா காண்டு, மாநில பாஜக தலைவர் பியூராம் வாகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.