தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஷிய ராணுவத்தில் இருந்த குஜராத் இளைஞர் உக்ரைனில் மரணம்

ரஷ்ய ராணுவத்தில் உதவியாளராக இருந்த குஜராத் இளைஞர் உக்ரைனில் மரணம் அடைந்தார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 5:06 am

DIN

சூரத்: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வந்த குஜராத்தைச் சேர்ந்த ஹேமில் அஸ்வின்பாய் மங்குகியா என்ற இளைஞர் உக்ரைன் போர்முனையில் வீரமரணம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், உக்ரைனில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கடந்த 23ஆம் தேதி ஹேமில் கொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹேமிலுடன் பணியாற்றி வந்த அவரது நண்பர்தான், தங்களது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில், இதனை நாங்கள் நம்பவில்லை. பிறகு மற்ற வழிகளில் இதனை உறுதி செய்துகொள்ள முயன்றோம். துரதிருஷ்டவசமாக இது உண்மை எனப்து தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

12வது வரை மட்டுமே படித்த ஹேமில் வெளிநாடு செல்ல வேண்டும் என்று பல நாள்களாக நினைத்து வந்த நிலையில், சாதாரண விசாவில் ரஷியா சென்றதாகவும், ரஷிய ராணுவத்துக்கு உதவியாளர்கள் தேவை என்று வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்தப் பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்புதான், அவரது வங்கிக் கணக்கில், முதல் மாதச் சம்பளம் வந்ததாகவும், அதற்குள் அவர் இறந்துவிட்டாரே என்று உறவினர்கள் கலங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.