பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறையின் அடிப்படையிலான நடவடிக்கையின்போது மூத்த காவல் அதிகாரி, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறையின் அடிப்படையிலான நடவடிக்கையின்போது மூத்த காவல் அதிகாரி, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மர்தான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் காவல்துறை கண்காணிப்பாளர் இஜாஸ்கான் கொல்லப்பட்டார், துணைக் காவல் கண்காணிப்பாளர் காயமடைந்தார். காயமடைந்த காவல் அதிகாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மர்தானின் கட்லாங் தெஹ்சில் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பயங்கரவாத எதிர்ப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான மொஹ்சின் கதிர் எனத் தெரிய வந்தது.
மாகாணத்தின் உள்துறை மற்றும் பழங்குடியினர் விவகாரத் துறையின் ஆவணங்களின்படி, பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெஷாவர், கைபர், பஜூர் மற்றும் டேங்க் ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் ஆகியவை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...